4வது வாரம்
7வது வாரம்
தற்போது...
ஆண் பூ... இதை பறிக்க கூடாது
பேபி கார்ன் - சிறப்பு பதிவு:
என் தோட்டத்தில் புது முயற்ச்சியாக இந்த சீசனில் பேபிகார்ன் விதைகளை வாங்கி இரண்டு தொட்டியில் 5 விதைகள் போட்டு சோதனை முயற்ச்சி செய்தேன்...
பேபிகார்ன் எப்படி வரும் என்ற எந்த முனனுபவமும் இல்லாமல் இனையதளத்தில் விதையை பார்த்தவுடன் ஒரு ஆர்வத்தில் வாங்கிவிட்டேன்.. ஒருவாராத்தில் விதை வந்துவிட்டது..வருமா? வராதா? என்ற தயக்கத்தில் 2 தொட்டி மட்டும் பயன்படுத்தலாம் என முடிவு செய்து வழக்கம்போல் coco peat, மற்றும் மண் புழு உரம் 2:1 என்ற விகித்ததில் கலந்து நேரடியாக் விதைத்து வைத்தேன்.. வைத்த 5வும் 3ம் நாள் முளைத்தது.. செடி மிகச் சிறப்பாக வளர்ந்தது.. எந்த பூச்சி தாக்குதலும் இல்லை, 2 மாதத்தில் சுமார் 7 அடி வரை வளர்ந்து தள்ளியது..
பேபி கார்ன் எப்படி வரும் , எங்கு வரும் என்ன அறிகுறி என எந்த அடிப்படை தகவலும் என்னிடம் இல்லை... ஒருவேளை மண்ணிக்கு கீழே வந்துஇருக்குமோ என்ற சந்தேகம் வேறு.. ஆர்வம் தாங்காமல் இனையதளத்தில் தகவலை தேடும்போது 21/2 மாதத்தில் செடியின் உச்சியில் ஆண்பூ மலரும் என்றும் , அதன் பின் கிளையில் கதிர் வரும் என்ற தகவலை படித்தேன்...
சரியாக 21/2 மாதத்திற்க்கு பின் தற்ப்போது செடியின் உச்சியில் நெற்கதிபோல ட்ஆண்பூ அழகாக வந்துள்ளது.. அதேபோல் கிளைகளில் கதிரும் வரத்தொடங்கியுள்ளது... கதிரில் நூல் போன்ற இழைகள் வெளியே தோன்ற அரம்பித்து இரண்டு நாட்களில் அறுவடை செய்துவிட வேண்டும்... அநேகமாக சனி அல்லது ஞாயிறு அன்றோ அறுவடை செய்ய இருக்கின்றேன்...
நிச்சயம் தோட்டத்தை விரும்பும் அனைத்து நண்பர்களும் உங்கள் இல்லத்தில் இந்த செடியை வைத்து அது பூக்கும் அழகை ரசியுங்கள்....
முளைத்ததிலிருந்து இன்றுவரை பேபிகார்ன் செடியின் வளர்ச்சியைன் படங்கள் பார்த்து உங்கள் கருத்துகளை தெரியுங்கள்....













0 comments:
Post a Comment