வீட்டு தோட்டம் முயற்சி செய்யுங்கள்:
என்னை போன்று சென்னையில் வாழும் பலர் ரொம்பவே பிசியாக இருப்பதுபோல் காட்டி கொள்கின்றனர்... எல்லா நேரத்திலும் ஏதோ ஒரு அழுத்தம், டென்ஷன்.. எனவே ரிலாஸ் பண்ண என்னெனவோ செய்கின்றனர்.
சிலர் சினிமாக்கு செல்லலாம், பீச் போகலாம் அல்லது ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் உள்ள இடத்துக்கு பணத்தை செலவு செய்து போகத்தான் செய்கின்றோம்.. ஆனால் தினமும் போக முடியுமா என்றால் முடியாது.. அப்படி என்றால் என்னதான் செய்வது என்று சிலர் தங்களை அறியாமலே யோசிப்பது உண்டு..
நானும் அப்படி யோசித்தவன் தான்.. எனக்கு வேலை பளு சற்று அதிகம் தான் இருந்தாலும் அதிகம் தூங்காமல் காலையில் கொஞ்சம் முன்பாக எழுந்துக்க வேண்டும், மாலை அங்கே இங்கே என்று செல்லாமல் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் எல்லாத்துக்கும் மேல செய்யும் தொழிலில் இருக்கும் டென்ஷன் வீட்டிற்க்கு கொண்டு வராமல் வீட்டில் நல்ல தோர் சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும், அதிக நேரம் தேவை இல்லாமல் இன்டர்நெட்டில் கழிக்கின்றோமே என சிந்திததேன்.. ஏனென்றால் இந்த ஆரோக்கியமான் குடும்ம சூழல்தான் வாழ்க்கைக்கு மிகவும் தேவை..
இதற்க்கு என்ன செய்யலாம்? ஜூன் மாதம் ஒரு தோட்டத்தின் புகைபடத்தை பார்த்தவுடன் வந்த ஆர்வம். இதற்க்கு முன் எனக்கு தோட்டத்தில் எந்த ஆர்வமும் இல்லை என் தந்தை தோட்டம் போட்டபோது கூட அத்தோட்டத்தை நின்று பார்த்ததுகூட இல்லை அனால் அந்த தோட்ட புகைப்படம் பார்த்தவுடன் வந்த ஆர்வம் என்னை இதை குறித்து படிக்கவைத்தது.. பின் செயல்பட வைத்தது...
படித்ததில் என்னை மிகவும் யோசிக்க வைத்த காரியம் நாம் உண்ணும் உணவு எவளவு இரசாயணம் நிறிந்தது என்பதை அறிந்துகொள்ள வைத்தது. இயற்க்கை விவசாயத்தின் முக்கியதும அறிய வைத்தது.. ஒருவேளை 10 வருடத்துக்குமுன் இந்த ஆர்வம் வந்திருந்தால் நிச்சயம் விவசாயம் தான் படித்திருப்பேன்...
முதற் முயற்சியாக 10 செடியில் ஆரம்பித்தேன் 4 மாத்த்தில் 78 செடியாக இன்று உள்ளது... அதுவும் வெறும் 400 சதுர அடியில்... எண்ணிக்கை குறைவுதான் ஆனால் அதில் நான் பெற்ற நன்மை மிக அதிகம்.. சிலவற்றை மட்டும் சொல்கின்றேன்
1. விதையை வைத்து அது முளைத்ததா என தினமும் காலை பார்க்கும் ஆர்வம் இருக்கின்றதே... நிச்சயம் அனைவரும் அனுபவிக்க வேண்டும்...அதுவும் முளைத்துவிட்டாள் சொல்லவே வேண்டாம் என்னை பொருத்தவரையில் 5000 ரூபாய் சம்பள உயர்வு வந்தால் வரும் சந்தோஷத்தை விட உண்ணதமானது.
2. தினமும் 7, 7 30 என எழும் நாம் ஆர்வத்தில் தோட்டம் வைத்தபின் விடியற்காலை 6 மணிக்கு விழிப்பதே தோட்டத்தில் தான்.. எத்தஅலாரமும் வைக்கவே தேவையில்லை..
3. அதே போல் மாலை செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதால் எங்கு இருந்தாலும் வீட்டிற்க்கு சீக்கிரம் வந்துவிடுகின்றோம்... இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு மகிழ்சி,
4. பூ பூப்பது , கய்ப்பது என ஒரு ஆர்வம் தொடர்ந்து நம்மை பிடித்து கொள்ளும்.. அநேகரிடம் அதை நான் வளர்த்தது என சொல்லும்போது உள்ள மனநிறைவு அசாதரண்மானது..
5. தோட்டம் வைத்தால் நிச்சயம் அதில் வேலை செய்ய வேண்டும்.. மண்னையும் உரத்தையும் சேர்க்க வேண்டும், பாத்தி எடுக்கவேண்டும், விதைக்க வேண்டும், தினமும் தண்ணீர் விட வேண்டும், களை அகற்ற வேண்டும், இப்படி தினமும் வேலை இருக்கும் என்னை பொறுத்தவரை ஜிம்முக்கு செல்லவேண்டாம் இதை செய்தாலே எல்லா உடற்பயிற்சியும் செய்த மாதிரி, பணம் மிச்சம்.
6 இயற்க்கையான் , ஆர்கானிக், பூச்சி கொல்லியற்ற காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றது..
7. புகைப்படம் ஆர்வம் உள்ளவருக்கு நல்ல புகைபடம் எடுக்க நல்ல இடம் கிடைக்கும்..
8. தோட்டம் இருப்பதால் பிற உயிர்கள் அணில், குருவி, கிளி போன்ற பறவைகள் நம் தோட்டத்தை சுற்றி வரும் பார்பதற்கே அழகு
9. தோட்டம் வைப்பதால் செடிகள் பற்றிய அறிவு நமக்கு வரும்...
10 எல்லாவற்றிக்கும் மேலாக மன நிம்மதி
இவைகள் எல்லாம் என் அனுபவத்தில் நான் கன்டதை வைத்து சொல்கின்றேன்ன் ..
நிச்சயம் அனைவரும் வாய்ப்புள்ளவர்கள் வீட்டு தோட்டம் அமைக்க வேண்டும்.. செலவு மிக குறைவு தான் ஆகும்... 10 செடி வைக்க 500 க்கும் குறைவாகதான் ஆகிறது எது எதற்க்கோ செலவு செய்கின்றோம் இதற்க்கு முயற்சி செய்து பாருங்கள்....
- அகஸ்டின்.