தோட்ட பயணம் 29/10/2015
சென்னையில் இன்று நல்ல மழை.. எனவே தோட்டம் பக்கமே போக வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் தோட்டத்தில் களிஃப்ளவர் செடியில் ஒரு வித்யாசம் தெரிந்தது என்னவென்று கிட்ட சென்று பார்த்தால் காளி ஃப்ளவரில் பூ வைத்து இருந்தது.. காளி ஃப்ளவர், கோஸ். கேரட் இதெல்லாம் நம்ம சென்னை வெயிலுக்கு வரவே வராது என சிலர் சொல்லியிருந்தனர் ஆனால் மூன்றும் என் தோட்டத்தில் அழகாக வந்துள்ளது..
புடலை போதும் என்ற அளவுக்கு காய்த்து தள்ளுகின்றது. வெண்டை சொல்லவே தேவை இல்லை, கத்தரி 7 செடியும் காய்க்கின்றது.
புது முயற்ச்சியாக செய்த உருளை கிழங்கு தொட்டியில் முளைத்து வளர்ந்து வருகின்றது. தோட்டம் வைத்து 3 மாத்திலேயே இவளத்வு செய்ய முடியும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. தற்போது நூக்கல் வைத்துள்ளேன் முளைத்தும் விட்டது.. அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்...























0 comments:
Post a Comment