அகஸ்டின் வீட்டு தோட்டம் பயணம் 17/10/15 1



அறுவடை: இந்த சீசனில் தற்போதிய நிலவர்ப்படி தினமும் ஏதேனும் ஒரு அறுவடை நடந்துகொண்டே உள்ளது... தினமும் 10 திவ்ண்டைக்காய் கிடைக்கின்றது, அவரை காய்க்கின்றது, கத்தரி, புடலை, பாவக்காய், முள்ளங்கி என ஏதேனும் ஒன்று ஒரு நாளைக்கு ஆறுவடை செய்யும் அளவு என் வீட்டு தோட்டம் வளர்கின்றது... எனவே எல்லா நாட்களின் படத்தையும் போட இயலாது ஆனால் இன்று பேபி கார்ன் 6 கதிர்களை அறுவடை செய்தேன் அதை இந்த பதிவில் போடுகின்றேன்.. அப்படியே பரித்து பச்சையாக சாப்பிடவே அருமையாக இருந்தது... தெரிந்திருந்தால் இன்னும் ஒரு 10 செடி வைத்திருப்பேன்...
இதனுடன் புடலை(குட்டை) சில வெண்டைகாயும் அறுவடை செய்யப்பட்டது... அவரை 5 பேருக்கு பொரியல் செய்யும் அளவுக்கு பரித்தேன்.....மீண்டும் அடுத்த பதிவில் கேரட் அறுவடையோடு வருகின்றேன்...

0 comments:

Post a Comment