- முதலில் புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும்.
- அதன்பின், தக்காளி நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக நட வேண்டும்.
- 20 நாட்களுக்கு பிறகு கொத்தி விட வேண்டும்.
- அதன்பின் உரம் போட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.
- தக்காளி செடியில் பூ வந்தபின் மருந்து அடிக்க வேண்டும்.
- சில தக்காளி செடியை அதாவது (நாட்டுத்தக்காளி, ஹைபிரைடு வகை) பொறுத்து அதற்கேற்றவாறு கொடி கட்டுதல், படர விடுதல் போன்றவற்றை செய்யலாம்.
- தக்காளி மூன்று மாதத்திற்குள் வரும். சில வகை ரகங்களை பொருத்து இது மாறுபடும்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.







0 comments:
Post a Comment